வேல்ஸில் அனுமதியின்றி ரோயல் கடற்படை சீருடை அணிந்தவர் கைது
வடக்கு வேல்ஸில் நினைவு நிகழ்வொன்றில் அனுமதியின்றி ரோயல் கடற்படையின் உயர் அதிகாரியாக உடை அணிந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
க்வினெட்டில் (Gwynedd) இல் உள்ள ஹார்லெச்சை (Harlech) சேர்ந்த 65 வயதான ஜோனாதன் கார்லி [Jonathan Carley] அனுமதியின்றி ரோயல் கடற்படையின் சீருடை மற்றும் பதக்கங்களுடன் ஆடை அணிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் அவரது படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு வேல்ஸில் உள்ள லாண்டுட்னோ [Llandudno] வில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம், மலர்வளையம் நிகழ்வில் பணியாற்றும் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள் கவலை எழுப்பியுள்ளனர்.





