இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பெருமளவு குழந்தைகள் பாதிப்பு
நாட்டில் பெருமளவிலான சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதால், புரதச்சத்துள்ள போஷாக்கு உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
20,000 முன்பள்ளி சிறார்களுக்கு காலை வேளையில் பூரண உணவு வழங்குவது பாரிய சவாலாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அந்த குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட 60 ரூபாவை 100 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வருடம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிச் சிறார்களுக்கும் காலை வேளையில் உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் 55,000 முன்பள்ளி சிறார்களை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.