லூசியானா ஈரநிலங்களை மாசுபடுத்துவதற்காக பிரபல எண்ணெய் நிறுவனதிற்கு $744 மில்லியன் அபராதம்

நியூ ஆர்லியன்ஸுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தை மாசுபடுத்தியதற்காகவும், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதியை மறுசீரமைக்கத் தவறியதற்காகவும் எண்ணெய் நிறுவனமான செவ்ரான் $745 மில்லியன் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூ ஆர்லியன்ஸின் தென்கிழக்கே சதுப்பு நிலப் பகுதியான லூசியானாவின் பிளேக்மைன்ஸ் பாரிஷில் உள்ள பாயிண்ட் எ லா ஹேச்சில் உள்ள ஒரு நடுவர் மன்றத்தால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
செவ்ரானின் முன்னணி வழக்குரைஞர் மைக் பிலிப்ஸ், நிறுவனம் “இந்த அநியாய முடிவுக்கு வழிவகுத்த ஏராளமான சட்டப் பிழைகளை நிவர்த்தி செய்ய இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யும்” என்று குறிப்பிட்டார்.
2001 ஆம் ஆண்டில் மற்றொரு எண்ணெய் நிறுவனமான டெக்சாகோவை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, பிளேக்மைன்ஸ் அதிகாரிகள் செவ்ரான் மீது வழக்குத் தொடர்ந்தனர்.