போலந்தில் கருகலைப்பு தொடர்பில் நடைபெறும் முக்கிய விவாதம்!
போலந்தில் சர்ச்சைக்குரிய சட்டமாக காணப்பட்ட கருகலைப்பு சட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள சட்டமியற்றுபவர்கள் நான்கு வெவ்வேறு திட்டங்களை இன்று (11.04) பரிசீலிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கருக்கலைப்பு தொடர்பில் 1993 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த சட்டமூலம் பின்பற்றப்படுகிறது.
மேலும் 2020 அரசியலமைப்பு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கருகலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
எட்டு வருட பழமைவாத அரசாங்கத்தின் பின்னர் டிசம்பர் மாதம் பதவிக்கு வந்த பிரதமர் டொனால்ட் டஸ்க், கர்ப்பத்தின் 12 வது வாரம் வரை கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதாக உறுதியளித்தார்.
இது ஒரு பெண் எடுக்க வேண்டிய முடிவு என்றும், பாதிரியார்கள், சட்டவியலாளர்கள் எடுக்க வேண்டிய முடிவு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் பெரும்பாலானர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இருப்பினும் இதற்கு எதிரான குழு கருக்கலைப்பு குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது வார்சா நகரத்தின் வழியாக அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக, பழமைவாத அரசியல்வாதிகள் மாற்றத்தைத் தடுக்கும் சக்தியுடன் முக்கிய அரசியல் பதவிகளை வகிக்கின்றனர். குறிப்பாக ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா, சட்டத்தின் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றவர் பாராளுமன்ற சபாநாயகர் ஸிமோன் ஹோலோவ்னியா. இவரும் கருகலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.