இலங்கையில் கல்வி முறையில் முக்கிய மாற்றம் : O/L இல் தேர்ச்சி பெறாவிட்டாலும் A/L செய்யலாம்!
 
																																		2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், பாடசாலைகளில் தரம் 12 க்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தொழிற்கல்விப் பிரிவுக்கு 12 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும்போது சாதாரண தரப் பரீட்சையின் தேர்ச்சி அல்லது தோல்வி நிலை கருத்தில் கொள்ளப்படாது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
https://moe.gov.lk/2025/05/37984/ என்ற இணைப்பிற்குச் சென்று விண்ணப்பங்களைப் பெறலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
