நாமலின் வெற்றிக்காக களமிறங்கினார் மகிந்த
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்க அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா மறுத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் .
அதனுடன், நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலை முதல் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாகப் பணியாற்றுமாறு நாடு முழுவதிலும் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி ஊடாக உரையாடினார்.
அதற்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.