உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்து சிறப்பு வரப்பிரசாதங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ, தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேனவும் ஏற்கனவே தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.