இலங்கை அரசியலில் இருந்து ஓய்வு குறித்து மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இது ஒரு தற்காலிகமான தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





