மதுரோ சட்டவிரோத ஜனாதிபதி – பிரித்தானியா அறிவிப்பு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பிரித்தானியா சட்டவிரோத ஜனாதிபதியாக கருதுகின்றதென பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஆட்சியின் முடிவு குறித்து வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்
வெனிசுலா மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நோக்கம் என்றும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
இதேவேளை, வெனிசுலாவில் உள்ள சுமார் 500 பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கராகஸில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துடன்
அரசு இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.
வெனிசுலாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.





