இலங்கை

தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன்!

தங்களது கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் முடிந்தவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் என்ற போதிலும், அதற்காக முயற்சிப்பதாகவும், பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் ஆட்சியமைக்கத் தகுதிபெற்றவர்கள் யார் என்பதைப் பொறுத்தே தங்களது தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்