லூவ்ரே (Louvre) கொள்ளை சம்பவம் – நீதிமன்றத்தில் முன்னிலையான பெண்!
பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத 38 வயதான அந்த பெண் மீது திட்டமிட்ட திருட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேநேரம் முன்னதாக அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று ஆண்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருவர் தங்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் மற்றொரு நபர் கைது செய்யப்படவில்லை. அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை கொள்ளையிடப்பட்ட நகைகள் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





