திருகோணமலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான லொறி!

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் லொறியொன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையில் இருந்து வவுனியாவுக்கு மீன்களை ஏற்றிச் சென்ற குறித்த லொறியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 7 times, 1 visits today)