காசா மோதல் காரணமாக இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த லண்டன் ராணுவ கல்லூரி

காசாவில் நடந்து வரும் போர் காரணமாக, இஸ்ரேலியர்கள் ராயல் ராணுவ கல்லூரியில் சேருவதை பிரித்தானியா தடை செய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல், சர்வதேச மூலோபாய ஆய்வுகளில் முதுகலை படிப்பை வழங்கும் கல்லூரியில் இஸ்ரேலிய மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸை எதிர்கொள்ள காசா நகரில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் இஸ்ரேலின் திட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்டுள்ளது.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எதிர்காலத்தில் பிரித்தானிய படிப்புகளில் இஸ்ரேலிய பங்கேற்பு இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் தடையை “பாரபட்சமானது” மற்றும் “நேர்மையற்றது” என்று அளித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)