வாகன விபத்தில் லண்டன் சிறுவன் பலி – ஐவர் வைத்தியசாலையில்
பிரித்தானியாவின் பீட்டர்பரோ அருகே A1 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து 02 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவித்துள்ளது.
லண்டனைச் சேர்த்த சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் டொயோட்டா காரில் பயணித்த லண்டனைச் சேர்ந்த மேலும் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய சந்தேகத்தின் பேரில் 64 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் மார்ச் 20 வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





