இலங்கையில் மதுபான சாலைக்களுக்கு பூட்டு
மதுபான விற்பனைக்கான உரிமம் வழங்கப்பட்ட இடங்களை எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மூடுவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப்பாட்டின் கீழ் மதுபான விற்பனைக்கான கலால் அனுமதிப்பத்திரங்களைக் கொண்ட ஹோட்டல்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட சகல நிறுவனங்கள் தொடர்பிலும் குறித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.





