உலகில் வாழ சிறந்த 10 நாடுகளின் பட்டியல் – முதலிடம் பிடித்த சுவிஸ்
உலகில் வாழ சிறந்த 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், US News மற்றும் Word Report வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையில் இந்த நாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, வாழ்வதற்கு சிறந்த 10 நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் குறைந்த வரி விகிதங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பான் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான ஜப்பான் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டதுடன் பொருளாதார சிக்கல்களிலிருந்து முன்னேறி வருகிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம் கொண்ட அமெரிக்கா இந்த தரவரிசையில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது.
கனடா 4வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5வது இடத்திலும் உள்ளன.
அற்புதமான கடற்கரைகள் மற்றும் பல்வேறு புவியியல் அம்சங்கள் காரணமாக ஆஸ்திரேலியா நீண்ட காலமாக சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் ஸ்வீடன், ஜெர்மனி, பிரிட்டன், நியூசிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே 6-வது இடத்திலிருந்து 10-வது இடம் வரை இடம் பெற்றுள்ளன.
இந்த கணக்கெடுப்பிற்காக 90 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 17,000 பேரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.