செய்தி விளையாட்டு

ஆஸியிடம் கற்று கொள்ள வேண்டும் -ஹர்மன்பிரித்

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவி தற்போது தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை இன்று வீழ்த்த வேண்டும்.

இந்த நிலையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மகளிர் அணி கேப்டன் ஹார்மன்பிரித் கவுர், தங்கள் அணி வீராங்கனைகளிடம் போதிய அனுபவம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், பவர் பிளேவில் அதிரடியாக ஆடக்கூடிய வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவிடம் இருக்கிறார்கள்.

ஆடுகளம் எவ்வாறு இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை மாற்றி அமைத்து ஆஸ்திரேலிய விளையாடுகிறது.

நாங்களும் அதே திட்டத்தில் தான் விளையாடினோம். ஆனால் எங்களுக்கு எதிர் பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.

நானும் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகின்றேன்.

எங்களுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால் எங்களுக்கு எளிதான ரன்களை அவர்கள் வழங்குவது கிடையாது.

ஆஸ்திரேலியாவிடம் அனுபவம் இருக்கிறது. ஒரே அணியாக இணைந்து பல உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் விளையாடி இருக்கிறார்கள்.

இதனால்தான் ஆஸ்திரேலியா எப்போதுமே சிறந்த அணியாக இருக்கின்றது.

எங்களுக்கு கிடைத்த சில மோசமான பந்துகளை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என நினைக்கின்றேன்.

நாங்கள் பந்து வீசும் போது பவுண்டரிகள் அதிகம் செல்வதை தடுத்து இருக்க வேண்டும். இந்த போட்டியில் கூட நாங்களும் வெற்றி பெறும் தருவாயில் தான் இருந்தோம்.

ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியா தங்களுடைய அனுபவத்தை வைத்து இது போன்ற நெருக்கடியான போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற குணங்களை ஆஸ்திரேலியாவிடம் இருந்து எங்கள் வீராங்கனைகள் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது அரையிறுதிக்கு செல்வது என்பது எங்கள் கையில் இல்லை.

எங்கள் கையில் இருந்ததை நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டோம். அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் மகிழ்ச்சி தான்.

இல்லையென்றால் தகுதியான அணிகள் தான் அரை இறுதிக்கு சென்றிருக்கிறது என்று அர்த்தம் என ஹர்மன்பிரித் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி