ஐரோப்பா

உக்ரைனில் அமைதி காக்கும் ஒப்பந்தம் தொடர்பில் விவாதிக்க ஸ்டாமர் தலைமையில் கூடும் தலைவர்கள்!

உக்ரைனில் அமைதி காத்தல் குறித்து விவாதிக்க சர் கீர் ஸ்டார்மர் இன்று (15.03) உலகத் தலைவர்களின் மெய்நிகர் கூட்டத்தை நடத்துவார்.

மேலும் “உறுதியான உறுதிமொழிகளுக்கான நேரம் இது” என்றும் அவர் கூறியுள்ளதாக டவுனிங் ஸ்டீரிட் தெரிவித்துள்ளது.

சுமார் 25 தலைவர்கள் இந்த அழைப்பில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அமைதி காக்கும் ஒப்பந்தம் தொடர்பில் அவர்கள் விரிவாக விவாதம் நடத்தவுள்ளனர்.

இதற்கிடையில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவைத் தொடர்ந்து அதிகரிக்குமாறும் பிரதமர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் ரஷ்யா மீது நாடுகள் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டால் நீண்ட காலத்திற்கு ஒரு இறுதி சமாதான ஒப்பந்தத்தை ஆதரிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகறிது.

 

 

(Visited 40 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்