இலங்கைக்கு உரம் அனுப்புவதை தடுத்த லாட்வியா : ரஷ்யா முன்வைக்கும் குற்றச்சாட்டு!
ஐரோப்பிய ஒன்றிய நாடான லாட்வியா இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு இலவச உரம் அனுப்புவதை தடுத்துள்ளதாக ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் நேற்று குற்றஞ்சாட்டினார்.
55,000 மெட்ரிக் டன் பொட்டாசியம் குளோரைடு உரத்துடன் கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யாவினால் வழங்கப்பட்ட இந்த உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நெல் விவசாயிகளுக்கு 30,000 மெட்ரிக் டன்களுக்கும், எஞ்சியவை தென்னை சாகுபடியாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.
ரஷ்யா மீதான மேற்கத்திய தடைகள் காரணமாக 2022 முதல் 260,000 மெட்ரிக் டன் ஏற்றுமதியின் ஒரு பகுதியான உரம் ரிகா துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தூதுவர் Dzhagaryan கூறினார்.





