சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிகப் பெரிய தங்க இருப்பு : சிக்கலில் ட்ரம்ப் நிர்வாகம்!

உலகின் “மிகப்பெரிய” தங்கப் படிமத்தின் கண்டுபிடிப்பு சர்வதேச அரசியலில் அதிகார சமநிலையை சீர்குழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வாங்கு தங்கப் படிமத்தில் 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது . இதன் மதிப்பு சுமார் £61 பில்லியன் ஆகும்.
தங்கத்தால் நிரப்பப்பட்ட பாறைகளில் நீண்ட மற்றும் மெல்லிய திறப்புகளைக் கொண்ட 40 க்கும் மேற்பட்ட தனித்துவமான தங்க நரம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், சீனாவின் மத்திய ஹுனான் மாகாணத்தில் இந்த மிகப்பெரிய தங்கப் படிமம் கண்டுபிடிக்கப்படலாம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
சுமார் 2,000 மீட்டர் ஆழத்தில் 300 டன் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது – எனவே இந்த படிமத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் டிரம்பிற்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ட்ரம்பின் வரி விதிப்பால் உலக நாடுகள் சீனாவுடன் கைக்கோர்க்க ஆரம்பித்துள்ள நிலையில் இது அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக மாறும் என குறிப்பிடப்படுகிறது.