ஏஐ வளர்ச்சி காரணமாக டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பெரிய அளவிலான பணிநீக்கம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் மீதான வேலைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2%–ஐ, அதாவது 12,261 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
அதேபோல், மைக்ரோசாஃப்ட், இன்டெல், மெட்டா, பானாசோனிக் உள்ளிட்ட பல நிறுவனங்களும் செயல்திறன் மற்றும் மறுசீரமைப்பு காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கி வருகின்றன.
ஐடி அமைச்சகம் இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், TCS-இன் பணி நீக்கத்தின் காரணங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
TCS நிறுவனம், தனது அறிக்கையில், ஏஐ தொழில்நுட்பம், புதிய சந்தைகள் மற்றும் உள்கட்டமைப்புத் தேவை காரணமாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என விளக்கியுள்ளது.