ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள பெருந்தொகையான வெளிநாட்டவர்கள்
ஜெர்மனியில் புகலிடம் கோரிய நிலையில் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய சுமார் 225000 பேர் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களை நாடு கடத்துவதற்குரிய துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
குறித்த அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமூக உதவிப்பணமும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல நாடுகளுடன் குடியேற்றம் விடயம் தொடர்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.
டப்லிங் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகளின் ஊடாக ஜெர்மனுக்கு வரும் அகதிகளுக்கு சமூக உதவி பணம் வழங்குவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெருமளவானவர்கள் ஜேர்மனுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக எல்லையில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.