பெருவில் பியூமாபே கோவில் வளாகத்தில் பெருந்தொகை மனித எலும்புக்கூடுகள்

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமைந்த பியூமாபே கோவில் வளாகத்தில், 14 மனித எலும்புக்கூடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த எலும்புக்கூடுகள் கிமு 1000ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்படுகிறது. ஆய்வுகளின்போது, அவை தலைகீழாக புதைக்கப்பட்டிருந்தது. சில எலும்புக்கூடுகளில் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த எலும்புக்கூடங்கள் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டிருப்பது, சாலினார் (Salinar) கலாசாரம் சார்ந்த பழைய வழிபாடுகள், சடங்குகள், மற்றும் பலி கொடுத்தல் போன்ற பழங்கால நம்பிக்கைகள் குறித்து முக்கியமான தகவல்களை வழங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சாலினார் நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)