இலங்கை : பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டம் – சீதாவக, படுக்கை
களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை
காலி மாவட்டம் – எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட
கம்பஹா மாவட்டம் – அத்தனகல்லை
கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க
இரத்தினபுரி மாவட்டம் – அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, அலபத்த, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட
எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள்
பதுளை மாவட்டம் – எல்ல, ஹாலி எல்ல, பசறை
காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நயாகம, இமதுவா,
களுத்துறை மாவட்டம் – பேருவளை
கேகாலை மாவட்டம் – கலிகமுவ
குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ
நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மதுல்ல, நிவித்திகல
இதேவேளை, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இது எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.