மகாராஷ்டிராவில் நிலச்சரிவு : 100 பேர் மாயம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 10 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அத்துடன் 100 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.