நில ஊழல் வழக்கு – இம்ரான் கானுக்கு ஜாமீன்
நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இரண்டு வழக்குகளில் இன்னும் குற்றவாளியாக இருப்பதால் தண்டனை அனுபவிக்க சிறையில் இருக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
2018-22 முதல் கான் பிரதமராக இருந்தபோது, அவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பர் மூலம் சட்டவிரோத சலுகைகளுக்கு ஈடாக நிலம் பரிசாக வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
தவறை மறுத்த கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது தரப்பு வழக்கறிஞர், நயீம் ஹைதர் பஞ்சுதா, சமூக ஊடக தளமான X இல் ஜாமீன் வழங்குவதை உறுதிப்படுத்தினார்.
71 வயதான கான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். மொத்தம், நான்கு வழக்குகளில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார், ஆனால் இரண்டு வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2022 இல் பாராளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டு உட்பட டஜன் கணக்கான வழக்குகளில் கான் பெயரிடப்பட்டுள்ளார்.
அவரது மனைவி புஷ்ரா பீபியும் 2018 இல் கானை சட்டவிரோதமாக திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.