தொழிற்கட்சியின் வரி உயர்வு – ஹொங்கொங்கை விட பின்தங்கும் பொருளாதாரம்!
அடுத்த ஆண்டில் (2026) பிரித்தானியாவின் பொருளாதாரம் ஹொங்கொங் மற்றும் பின்லாந்தை விட ஏழ்மையானதாக இருக்கும் என புதிய கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
நடப்பு அரசாங்கத்தின் வரி உயிர்வுகள் காரணமாக இந்நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) லீக் அட்டவணையில் தற்போது 19 ஆவது இடத்தில் இருக்கும் பிரித்தானியா வரும் ஆண்டில் 21 ஆவது இடத்திற்கு சரியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தொழிற்கட்சி தனது பதவிக்காலத்தில் மிகக் குறைந்த வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளதாக பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (CEBR) கூறியுள்ளது.
புதிய தரவுகளுக்கு அமைய, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடும் போது, ஐஸ்லாந்து, நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை விட பிரித்தானியா பின்தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் லக்சம்பர்க் (Luxembourg) முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா ஏழாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 13வது இடத்திலும் உள்ளன.
அதேபோல் ஜெர்மனி 18 ஆவது இடத்திலும், பிரான்ஸ் 26 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





