செய்தி

“போதும் நிறுத்துங்க… ஓவரா போகுது” பொங்கி எழுந்த 19 வயது நடிகை

விஜய்சேதுபதியுடன் உபென்னா படத்தில் நடித்ததன் மூலம் இளம் ரசிகர்கள் மனதில் சட்டென இடம் பிடித்த நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழில் தி வாரியர், கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் அடுத்து ஜீனி படத்தில் ஜோடி சேர்ந்துள்ள க்ரித்தி ஷெட்டிக்கு ஸ்டார் ஹீரோ ஒருவரின் மகன் டார்ச்சர் கொடுப்பதாக பரபரப்பு சோஷியல் மீடியாவில் சில நாட்களாக பற்றிக் கொண்டது.

நடிகை க்ரித்தி ஷெட்டி 15 வயதிலேயே ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். விஜய்சேதுபதி உடன் உப்பென்னா, நானியுடன் ஷியாம் சிங்கா ராய், லிங்குசாமி இயக்கிய தி வாரியர், வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த க்ரித்தி ஷெட்டி அடுத்ததாக மலையாளத்தில் அஜயண்டே ரண்டாம் மோஷனம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் தரமான என்ட்ரி கொடுக்க தொடர்ந்து க்ரித்தி ஷெட்டி முயற்சித்து வருகிறார். தி வாரியர், கஸ்டடி படங்கள் க்ரித்தி ஷெட்டியின் ஆசையில் மண்ணை அள்ளி போட்ட நிலையில், அடுத்ததாக ஜெயம் ரவியின் 100 கோடி பட்ஜெட் படமான ஜீனி படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ளார்.

வாமிகா காபி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வரும் ஜீனி படத்தில் க்ரித்தி ஷெட்டியும் லீடு ரோலில் நடிக்க உள்ளார். சமீபத்தில், பிரம்மாண்டமாக அந்த படத்தின் பூஜை போடப்பட்டது.

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி செல்லும் இடங்களுக்கு எல்லாம் பிரபல நடிகரின் மகன் ஒருவர் வருவதாகவும், அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நடிகையை வரச் சொல்லி லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக சில நாட்களாக மீம்களும் கிசுகிசுக்களும் கிளம்பி உள்ளன.

அது தொடர்பாக நடிகை க்ரித்தி ஷெட்டி எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், அதுகுறித்து மனம் திறந்து பதிவிட்டுள்ளார் நடிகை க்ரித்தி ஷெட்டி.

“போதும் நிறுத்துங்க: இது கொஞ்சமும் ஆதாரம் இல்லாத வதந்தி என்றும் தன்னை எந்த நடிகரின் மகனும் அப்படி டார்ச்சர் செய்யவில்லை என்றும் இதுவரை இதை கண்டுக்கொள்ளாமல் தான் இருந்து வந்தேன். ஆனால், விஷயம் பெரிதான நிலையில், அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார். நடிகை க்ரித்தி ஷெட்டியை டார்ச்சர் செய்ததாக கிசுகிசுக்கப்பட்ட அந்த பெரிய நடிகரின் மகன் யார் என்கிற ஆராய்ச்சியிலும் நெட்டிசன்கள் இறங்கி உள்ளனர். இந்நிலையில், அதிரடியாக வதந்திகளுக்கு க்ரித்தி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்திருப்பதை பலரும் வரவேற்று வருகின்றனர்.

https://twitter.com/IamKrithiShetty/status/1676929223762792448

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி