இந்தியா விளையாட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த கொல்கத்தா அணி வீரர்கள்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,

வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்.

குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!