ஆசியா செய்தி

மலேசியாவில் அதிரடியாக மூடப்பட்ட 100க்கும் மேற்பட்ட KFC உணவகங்கள்

மலேசியாவில் KFC தனது செயல்பாடுகளை குறைத்து, 100க்கும் மேற்பட்ட உணவகங்களை தற்காலிகமாக மூடியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள KFC துரித உணவுக் கடைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதொக குறிப்பிடப்படுகின்றது.

காசாவில் நடந்து வரும் போரினால் பல மாதங்களாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவான அமெரிக்க – இணைக்கப்பட்ட வணிகப் புறக்கணிப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக அந்தக் கடைகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கை தொடர்வதால் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் பெறுவதற்கு Business Times, QSR Brands (M) Holdings Bhd நிறுவனத்தைத் தொடர்புகொண்டிருப்பதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

KFC நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தப் பிறகே அதன் தொடர்பில் பதிலளிக்க முடியும் என்று QSR பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் – பாலஸ்த்தீன நெருக்கடி தொடங்கியதில் இருந்தே மலேசியாவில் Starbucks, McDonalds, KFC ஆகிய துரிய உணவுக் கடைகளைப் புறக்கணிக்கும் போக்கு ஆரம்பித்துவிட்டது.

மலேசியாவில் KFCயின் 10 சதவீதத்திற்கு மேற்பட்ட கடைகள் வியாபாரத்தை நிறுத்திவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏப்ரல் 27ஆம் திகதி வரை, மலேசியா முழுதும் உள்ள 108 KFC கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!