மத்திய கிழக்கு

கென்யா – 100 மாணவிகள் மர்ம நோயால் பாதிப்பு… பள்ளியை இழுத்து மூடியது அரசு!

கென்யாவின் எரேகியில் செயல்படும் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கால்களில் செயலிழப்பை ஏற்படுத்தும் மர்ம நோய் பரவல் காரணமாக அப்பகுதியில் பீதி நிலவி வருகிறது. இந்த நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், இவை தொடர்பான மருத்துவ ஆய்வில் கென்யா தடுமாறி வருவதாகவும் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் இரத்த மாதிரிகள் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, நோயின் தன்மை மற்றும் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உடலில் நீரிழிப்பு ஏற்பட்டிருப்பது மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆகியவை மருத்துவர்கள் மற்றும் பெற்றோரை தடுமாறச் செய்து வருகின்றன.

Mystery illness: 95 Eregi girls admitted as school awaits test results - KBC

சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. எனினும் படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அப்பகுதியில் சுகாதார அவசர நிலையை கோருகிறது. மர்ம நோய் பாதிப்பு கண்ட மாணவிகள் அடுத்த அடி எடுத்து வைக்கவே தடுமாறுகிறார்கள். அது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் காலத்துக்குப் பின்னர் உலகின் எந்த மூலையில் மர்ம நோய் தலையெடுத்தாலும், அவற்றின் பின்னணி, வீரியம், பரவல், உயிரிழப்புக்கான ஆபத்து உள்ளிட்டவை தொடர்பான அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உடல்நல பாதிப்புகள் மருத்துவ சவாலை அதிகரிக்கும்போது இந்த அச்சம் மேலும் உயர்வதற்கு காரணமாகிறது

https://twitter.com/i/status/1709498743660122442

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.