ஊடகங்களிடம் நடுவிரலை காட்டிச் சென்ற கெஹலியவின் மகன்! வீடியோவால் சர்ச்சை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை நோக்கி ஆபாசமான சைகையை காட்டும் வீடியோவால் சர்சை ஏற்பட்டுள்ளது.
296 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதற்கு கணக்கு காட்டத் தவறிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து , பிரதிவாதியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்று நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அவர் ஊடகங்கள் முன்னிலையில் ஆபாசமான சைகையை காட்டிச் சென்றுள்ளார்.
இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.





