கரூர் சம்பவம் – அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும்! பழனிசாமி உறுதி
நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமது ஆட்சியின் கரூர் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விசாரணையை அடுத்து 41 உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு, மத்திய விசாரணை அமைப்பான சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில் திமுக அரசாங்கம் செயற்படுகிறது. அதிமுக வெற்றிக்காக பரப்புரைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எடப்பாடி மேலும் தெரிவித்துள்ளார்.





