இலங்கை

மீண்டும் ஆரம்பமானது காரைநகர் – யாழ்ப்பாணம் வரையான பேருந்து சேவை

காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் 785/1 பேருந்து சேவை இன்று ஆரம்பமானது

கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர்- மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து முன்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் தனது பயணத்தை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு தடைப்பட்டது.

இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பஸ் போக்குவரத்து செய்ய முடியாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பஸ் போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் பிராந்திய நிலையத்துடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக மீண்டும் இந்த பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!