கருத்து & பகுப்பாய்வு

நினைவேந்தல்களை நீதி தடுத்தது..!

யுத்தம் முடிந்தபின் போர்க்குணங்கள் அழிந்து போய்விட்டது முடங்கிப்போய்விடும் ,என அரசாங்கமும் அதற்கு பக்கம் பாடுகிறவர்களும் கூறினாலும் அது மீண்டும், மீண்டும் தளைத்துக்கொள்ளும் ஒரு சூரத்தளைப்பு என்பதை வடக்கிலும், கிழக்கிலும் நடத்தப்பட்ட நினைவேந்தல்கள் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்திய இராணுவம் அமைதி காக்கும் படையாக தரையிறங்கியபோது வட கிழக்கில் வாழும் மக்கள் பச்சைக்கனவுகளில் மிதந்தார்கள். தாய்நாடு ஒன்று பிறக்கப்போகிறதென்ற கற்பனையும் களிப்பும் அவர்களை உச்ச சந்தோஷத்துக்கு கொண்டு சென்றது. சுதந்திரத்துக்கப்பின் தாம் பட்ட அவலங்களுக்கு விடிவு கிடைத்துவிடுமென நம்பினார்கள்.

12 நாட்கள் பகலிரவு என்று பாராமல் உண்ணா விரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட திலீபன் எனும் தியாக சுடர் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி தீக்குள் ஆகுதியானான். இதன் எதிர் விளைவாக இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிரானபோர் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்திய வல்லரசை நோக்கி ஐந்து அம்ஷகோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்த திலீபனின் கோரிக்கைகளையோ அவனின் உண்ணா விரதத்தையோ ஒரு பொருட்டாக அல்லது மனிதாபிமனத்துடன் அணுகாத இந்திய அரசு அவன்pன் மரணிப்பை வேடிக்கை பார்த்தது. இந்திய அரசு நினைத்திருந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஒரு சில விநாடிகளே போதுமானதாக இருந்திருக்கும்.

இந்தியா . தனது உறுதி மொழியை நிறைவேற்ற தவறியதை சுட்டிக்காட்டும் வகையிலும் தமிழ் மக்களின் ஆற்றாமை உணர்வு தேசிய மக்கள் எழுச்சியாக ஒன்று திரட்டும் வகையிலும் திலீபன் தனது உண்hவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தான். ஆயுதப்போராளியான திலீபன் மாபெரும் இந்தியத்தலைவரான மகாத்மா காந்தியால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்மீகப்பண்பு கொண்ட போராட்ட வழியை கையாண்டு தமிழ் மக்களின் இக்கெட்டான நிலமையை இந்திய மக்களுக்கும் உலகுக்கும் உணர்த்த இப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் மற்றும் இந்தியா ஆகிய இருதரப்பினருக்கும் இடையில் ; நடைபெற்ற பேச்சவார்த்தையில் பங்கு கொண்ட குழுவில் ஒருவராக திலீபனும் கலந்து கொண்டிருந்தார். அங்கே இந்தியப்பிரதமர் ரஜீவ்காந்திக்கும் விடுதலைப்பலிகளுக்கும் இடையே இடம் பெற்ற பேச்சவார்த்தையின் உள்ளடக்கத்தை திலீபன் தெரிந்து வைத்திருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் ரஜீவ் காந்திக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டிருந்ததை திலீபன் தெரிந்து கொண்டார்..அது நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்படுவது கண்டு தமிழ் மக்களும், விடுதலைப்போராட்டமும் ஏமாற்றப்பட்டு விட்டதாக திலீபன் கருதினார்.எனவே அந்த உறுதி மொழி நிறைவேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு சாகும்வரை உண்ணாவிரதத்தை யாழில் மேற்கொள்ள திலீபன் முடிவ செய்தார்.

மிகப்பெரிய மக்கள் ஆட்சி நடைபெறும் நாட்டில் நீதி கேட்டு தனியொரு மனிதன் நடத்தும் இந்த அகிம்ஷை போராட்டத்தை வட கிழக்கு மக்கள் முழுமையாக ஆதரித்தார்கள். இந்திய அரசின் நழுவல்தனத்தை தோலுரித்துக்காட்டும் தனியொரு போராளியாக புறப்பட்டிருந்தமை திலீபனின் தீரத்தையும் மன உறுதியையும் எடுத்துக்காட்டியது. இதன் காரணமாக தமிழ் மக்கள் அமைதிப்படை மீது கொண்டடிருந்த சீற்றமும் வெறுப்பும் வளரத் தொடங்கியது.

நாட்படநாட்பட ஒடுங்கிக்கொண்டிருக்கும் திலீபனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரேயொரு காரியம் நடந்தால் மட்டுமே போதுமானதாக இருக்குமெனக் கருதப்பட்டது. இந்தியாவின் இலங்கைக்கான தூதுவராக அப்போது கடமையாற்றிக் கொண்டிருந்த டிக்சிற் தமது கௌரவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு திலீபனிடம் வந்து “இந்தியா தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றும்” என்று வாக்குறுதி அளித்திருந்தால் அது போதுமானதாக இருக்குமென விடுதலைப்புலிகளின் தலைமையினர் கருதினர். ஆனால் புலிகளின் இந்த எதிர்பார்ப்பு அதிக பிரசங்கித்தனமாகவும் பார்க்கப்பட்டது. இந்திய வல்லரசு கெஞ்சும் அளவுக்கு இப்போராட்டம் வலுவுடையதாக அவர்களால் எண்ணப்படவில்லை.

திலீபனின் உண்ணாவிரதப்போராட்டம் 8 ஆவது நாளை (22.9.1967) எட்டிய வேளை பலாலி விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார் இந்திய தூதர்.. அங்கு அவரை சந்திப்பதற்கு விடுதலைப்பலிகளின் தலைவரும் அரசியல் ஆலோசகருமான அன்டன் பாலசிங்கமும் சென்றிருந்தார்கள். தூதுவர் கடும் சினத்துடனும் வெறுப்புடனம் காணப்பட்டார் என்றும் திலீபனின் உண்ணாப்போராட்டம் இந்திய அரசுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டிவிடும் ஆத்திரம் ஊட்டும் செயலே என்று டிக்சிற் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மரணப்படுக்கையில் வினாடிக்கு வினாடி செத்துக்கொண்டிருக்கும் தலீபனிடம் சென்று இந்தியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் உண்ணா விரதத்தை கைவிடுமாறு கேட்க வேண்டுமென்று பாலசிங்கம் குழுவினர் டிக்சிற்றிடம் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால் டிக்ஷிற் தனக்கே உரித்தான செருக்குடன் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

12 நாட்கள் உண்ணாமல் உறங்காமல் தனது மக்களின் விடிவுக்காக நோன்பிருந்த அந்த ஆத்மா 12 ஆவது நாள் (26.9.2023) பூவுலகுக்கு விடை கொடுத்தது. இதன் வரலாற்றுப் பின்னணியில்தான் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் வட கிழக்கிலும் புலம் பெயர் நாடுகளிலும் இ;டம்பெற்றிருக்கிறது.

யாழ் நல்லூரில் அனுட்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஊர்திகள் ஊர்வலம் வந்தன தூக்கு காவடி எடுத்து நோத்திக்கடன் செய்தவர்கள் தமது உடலில் தலீபனின் உருவத்தை பச்சை குத்திக்கொண்டவர்கள் கற்பூரத்தை தலையில் ஏந்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தானம் அளித்தல் அன்னதானம் வழங்கியமை மரக்கன்றுகள் வழங்கியமைபோன்ற பல்வேறு தான, தர்மங்கள் இடம் பெற்ற ஒரு நினைவேந்தலாக அமைந்து காணப்பட்டது.

வட கிழக்கு எங்கும் தியாக தீபத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்திய நிகழ்வகள் இன்னும் இந்த மண்ணில் தியாகங்கள் மறைக்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. எந்த இடத்தில் மரணமென்னும் தியாகச் சுடரை ஏற்றி திலீபன் சங்கமித்தானோ அதே நல்லூர் மண்ணில் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் துயிலும் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞன் ஒருவன் ஞாபகார்த்தமாக தனது உடலில் திலீபனின் உருவத்தை பச்சை குத்திக்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பொது மக்கள் என எல்லோரும் கூடி திலீபனின் படத்துக்கு மாலையிட்டு மலர் தூவி ஈகை சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஏலவே யாழ் நீதவான் நீதி மன்றில் கடந்த (18.9.2023) அன்று நினைவேந்தலுக்கு தடை உத்தரவு கோரி யாழ் பெலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து கொழும்பிலிருந்து விஷேட ஹெலிகொப்டரில் வந்த சட்டமா அதிபர் காரியாலய அதிகாரிகள் மற்றும் சட்டவாளர்கள் தடை செய்யக்கோரி மீண்டும் நீதி மன்றில் மனு தாக்கல் செய்தார்கள். இந்த மனுவையும் யாழ் நீதி மன்றம் (19.9.2023) தள்ளுபடி செய்தது. தள்ளுபடி செய்த நீதிபதி நினைவேந்தல்கள் நடைபெறும் போது வன் முறைகள் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்தவும் கைது செய்யவும் பொலீசாருக்கு அதிகாரம் இருக்கிறது எனவே வன் முறைகள் நடைபெறுமென கற்பனை செய்து தடை கோருவது பொருத்தமற்றது என நீதிபதி நிராகரித்திருந்தார்.

அடாதுமழை பெய்தாலும் விடாது நடத்தப்படும் என்பதுபோல் கடும் மழை பெய்தபோதும் நினைவேந்தல் நடத்தப்பட்டதுடன் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தின் வட வீதியில் ஆவண கண்காட்சி நடைபெற்ற இடத்திலும் திலீபனுக்கு அஞ்சலி நகழ்வு இடம் பெற்றது. இவ்விடத்துக்கு இரு தூக்கு காவடிகள் கொண்டுவரப்பட்டதுடன் 6 மேற்பட்ட ஊர்த்திகள் பல இடங்களிலும் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் சில ஊர்த்திகள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து புறப்பட்டு தர்மபுரம் பரந்தன் பளை ஊடாக நல்லூரை வந்தடைந்தது.யாழ்குடா நாட்டுக்கு வெளியே முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் தியாகி தலீபனின் நினைவேந்தல், உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் சற்றும் வித்தியாசமான வகையில் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தபோதும் நிகழ்வுகளுக்கு பல்வேறு சவால்கள் ஏற்பட்டது. இருந்தபோதும் அந்த சவால்கள் தாண்டப்பட்டு நினைவேந்தல் கொண்டாடப்பட்டது. திருகோணமலையில் மக்கள் பேரiவியின் ஏற்பாட்டில் குளக்கோட்டன் மண்டபத்தில் வைபவம் ஏற்பாடாகியிருந்தபோதும் துறைமுகப் பொலீசார் திருகோணமலை நீதி மன்றத்தில் நிகழ்வுக்க எதிராக தடையுத்தரவு வாங்கியிருந்தார்கள். இருந்தபோதிலும் மக்கள் மண்டபத்தில் ஒன்று கூடியிருந்தார்கள். மண்டபம் மற்றும் தபால் கந்தோர் வீதி மழுவதும் பொலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். புலனாய்வுப்பிரிவினர் சுற்றிவளைத்து நின்றார்கள். நினைவேந்தலை நடத்தக்கூடாது என துறைமுக பொலீஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ. ஜே.எஸ் ரணவீரா நீதி மன்ற தடையாணையைப்பெற்று அந்த தடை உத்தரவை ஏற்பாட்டாளர்களுக்கு வாசித்துக்காட்டினார்.

நீதி மன்றினால் தடையாணை விதிக்கப்பட்டு பொலீசார் தடுத்தும் தடையாளர்கள் தவிர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள், முன்னாள் போராளிகளின் உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி நினைவேந்தலை நடத்தியிருந்தார்கள். மக்களின் உணர்வு மயமான முன்னெடுப்புக்கு முன்னால் எதுவுமே தற்செய்ய முடியாமல் போய்விட்டது.

மட்டக்களப்பில் மிக பிரசித்தமாக அனுஸ்டிக்கப்பட்ட நினைவேந்தலில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் உரையாற்றுரகயில் திலீபன் என்னும் தியாக சுடரின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படவேண்டுமென கூறியிருந்தார். 36 ஆவது நினைவேந்தல் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருமாகிய இரா. சம்பந்தன் குறிப்பிடுகையில் திலீபனின் உண்ணாவிரதப்போராட்டமானது அதி உன்னதமானது. அந்த வீரனின் தியாகத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது தமிழர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியாக நின்று அனுட்டிக்கவேண்டுமென கோரியிருந்தார்.

இவ்வாறு அனுட்டிக்கப்பட்டபோதும் சில அசம்பாவிதங்கள் அரசாங்கத்தாலோ அன்றி பாதுகாப்பு தரப்பினராலோ திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றது. திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு ஏலவே திட்டமிட்டபடி வாரம் முழுவதும் அனுட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் (15.9.2023). 27 ஆம் திகதி வரை நிகழ்வுகள் இடம் பெற்று வந்தன. இதனை முன்னிட்டு யாழ்; மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் பொத்துவிலிருந்து யாழ் நல்லூர்வரை திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி கொண்டுவரப்பட்ட நிலையில் மட்டக்களப்பிலிருந்து மூதூர் ஊடாக திருகோணமலைக்கு ஊர்தி கொண்டுவரப்பட்ட வேளை திருகோணமலை சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து பேரினவாத விஷமிகளால் ஊர்தி தாக்கப்பட்டு சிகை;கப்பட்டதும், தலைமை தாங்கிவந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் பல அதிர்வு அலைகளை ஏற்படுத்தியிருந்தமை கவலை தருவதாகவும் விசனத்தை உண்டுபண்ணும் சம்பவமாகவும் இருந்துள்ளது.

இறந்த ஆத்மாக்களை நினைவு கொள்ளும் சுதந்திங்கூட இல்லாத நாடாக இலங்கை கொடுந்தன்மை நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிற தென்பது கவலை தருகிற விடயமாக இருக்கிறது.

நன்றி – அக்னியன்

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை