ஜெர்மனியில் நீதிபதியின் மோசமான செயல் – நீதிமன்றத்தின் உத்தரவால் அதிர்ச்சி
கொரோனா காலத்தில் நீதிபதி ஒருவர் தவறாக நடந்து கொண்டமை தொடர்பாக அவருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா தொடர்பில் கட்டுப்பாட்டுக்கள் விதிக்கப்பட்டு இருந்த காலங்களில் கிழக்கு ஜெர்மனியில் நகர நீதிமன்றத்தில் குடும்ப நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற நீதிபதி ஒருவர் கொரோனா கட்டுப்பாட்டு விடயத்தில் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாடசாலையில் முக கவசம் அணிய வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீக்கி தனது தீர்ப்பை வழங்கியிருந்தார்.
அதாவது இந்த குடும்ப விடயங்களை ஆராய்கின்ற இந்த நீதிபதியானவர் தனது அதிகாரத்துக்கு மேற்பட்ட வகையில் இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தார்.
அதாவது இவரது இந்த நடவடிக்கையானது சட்ட விரோதமான செயற்பாடாக கருதப்பட்டுள்ளது.
இதனால் இவருக்கு எதிராக பிரதேச அரச தரப்பு சட்டதரணிகள் வழக்கை ஆரம்பித்து இருந்தார்கள்.
இந்த வழக்கை விசாரித்த பிரதேச மாவட்ட நீதிமன்றமானது இந்த நீதிபதியானவர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சில தீர்ப்புக்களை வழங்கினார் என்பதை சுட்டிகாட்டி தனது தீர்ப்பை வழங்கி இருந்தது.
இந்த வழக்கை தொடர்ந்த அரச தரப்பு சட்டத்தினர் இந்த நீதிபதிக்கு எதிராக 3 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடினார்கள்
நீதிமன்றமானது இந்த வாத திறமைகளை கவனத்தில் கொண்டு பின்னர் இந்த நீதிபதிக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறை தண்டனையை விதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.