வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞர் – யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு?

இலங்கையின் இளைஞர் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான் நிறுவனம் ஒன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் அண்மையில் அமைச்சரை சந்தித்துள்ளனர்.
இதன்போது, குறித்த கோரிக்கைக்கு, ஜப்பானிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்துள்ளதுடன், இலங்கையின் தொழில்நுட்ப திறனைப் பாராட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 27 times, 1 visits today)