ஜெர்மனியில் வேலை இழப்பு அபாயம்: மூன்றில் ஒரு நிறுவனம் ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்
ஜெர்மனியில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள், 2026ஆம் ஆண்டில் வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் பொருளாதார நிறுவனத்தின் (German Economic Institute) புதிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2,000 நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், 38 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்க விரும்புவதாகத் தெரியவந்துள்ளது. அதே சமயம், 18 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அடுத்த ஆண்டு அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளன.
2026ஆம் ஆண்டில் பல வணிகங்கள், குறைவாகச் செலவு செய்து உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
இதன்படி, பவேரியா மற்றும் வடக்கு ஜெர்மனியில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வணிகங்கள் மந்தமடையலாம்.
உலகளாவிய அரசியல் பதற்றங்களே நிறுவனங்கள் சிரமப்படுவதற்கு முக்கியக் காரணம் எனப் பொருளாதார நிபுணர் மைக்கேல் க்ரோம்லிங் (Michael Grömling) தெரிவித்துள்ளார்.
மேலும், வலுவான நடவடிக்கைகளை எடுக்காமல் அரசாங்கத்தின் 500 பில்லியன் யூரோ முதலீட்டுத் திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வெற்றிபெறாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.





