நிலவை சுற்றி வந்த முதல் விண்வெளி வீரர் ஜிம் லோவெல் 97 வயதில் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஸ்மிலின் ஜிம் லவெல் அவரது 97வது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்தபோதே ஜிம் காலமானார்.
1968ம் ஆண்டு அப்பல்லோ 8 விண்கல பயணத்தில் ஜிம் தலைமை தாங்க நாசா வீரர்கள் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.
புவியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு மேற்கொண்ட அந்த பயணம் வரலாறு படைத்தது.
இவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு 10 தடவை நிலவை சுற்றி வந்தனர்.அவரது வாழ்நாளில் நான்கு தடவைகள் அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அவரது மறைவுக்கு நாசா விண்வெளி மையம் வருத்தம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)