பிரான்ஸில் தீவிர பாதுகாப்பில் யூத பாடசாலைகள்

பிரான்ஸில் தீவிர பாதுகாப்பில் யூத பாடசாலைகள
பிரான்ஸில் உள்ள அனைத்து யூத பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் Gerald Darmanin இதனை அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து யூத பாடசாலைகளிலும், யூத வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அதையடுத்து பொலிஸார் மற்றும் ஜொந்தாமினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவது வெளிப்படையாக உள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கைகள் பல மடங்காக உள்ளது எனவும் அமைச்சர் நம்பிக்கை அளித்தார்.
(Visited 31 times, 1 visits today)