செய்தி

தாறுமாறாக பட்டையை கிளப்பும் ஜவான் ட்ரைலர்… அட்லி என்னடா பண்ணி வச்சிருக்க?

பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் மிகப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஜவான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் 7ம் தேதி வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்று இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரும் ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறது. அதிலும் படத்தின் மேக்கிங் தாறுமாறாக இருக்கிறது.

ஷாருக்கானின் ஆக்சன் அவதாரமும், விஜய் சேதுபதியின் வில்லத்தனமும் மாஸாக இருக்கிறது. அதிலும் ஷாருக்கான் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் வருவதும், புள்ள மேல கைய வைக்கிறதுக்கு முன்னாடி அப்பன தொடு பார்க்கலாம் போன்ற வசனங்களும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

அவருக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் வயதான கெட்டப்புடன் வரும் விஜய் சேதுபதியும் அசத்தலாக இருக்கிறார். அதேபோன்று நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்களின் கதாபாத்திரங்களும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது.

இவ்வாறாக வெறித்தனமாக வெளிவந்துள்ள ஜவான் ட்ரெய்லர் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

 

(Visited 16 times, 1 visits today)

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி