300,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் கொண்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு தயாராகும் ஜப்பான்
300,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் கொண்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு ஜப்பான் தயாராகி வருகிறது.
அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ஜப்பானின் Nankai Troughயில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு மிகப்பெரிய பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி 298,000 பேர் வரை உயிரிழக்கவும், 3 டிரில்லியன் டொலர் சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அமைச்சரவை அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.
ஜப்பானிய அரசாங்கம் தற்போது அதைச் சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் இறப்புகளின் எண்ணிக்கையை சுமார் 20 சதவீதம் குறைக்க ஏற்கனவே தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய அச்சங்கள் ஜப்பானுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன.





