செய்தி தமிழ்நாடு

திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பனையப்பட்டி அருகே வீரணாம்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் சந்தனக்காப்பு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வெகு விமர்சையாக  நடைபெற்றது. இந்தப் போட்டியில் 350 காளைகள் 60 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் தாலுக்கா பனையப்பட்டி அருகே வீரணாம்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் சந்தனக்காப்பு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர்,திருவாரூர், திருச்சி, காரைக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 350 காளைகளும் 60 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கடைபிடித்து நடைபெற்றுது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லு கட்டினர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து காளைமாடு உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் திருமயம்  போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் சுகாதாரத் துறையினர், வருவாய்த்துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

(Visited 2 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி