இந்தியா செய்தி

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருக்கும் ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டருக்கு பிணை கிடைத்துள்ளது.

நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.

முதலில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக்கூறிய ஜானி மாஸ்டர் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியது.

அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஜானி மாஸ்டர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பிணை கேட்டு அவர் அளித்த மனு தள்ளுபடியானது.

இந்த நிலையில், ரங்கா ரெட்டி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் விரைவில் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்.

மேலும், பிணையில் வெளியே வரும் ஜானி மாஸ்டர், புகார் அளித்த பெண்ணிற்கு எந்தத் தொந்தரவோ, அழுத்தத்தையோ தரக்கூடாது என நீதிமன்றம நிபந்தனை அளித்துள்ளது.

(Visited 20 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி