இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் – தமிழகம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக அந்த சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை