இலங்கை

யாழ்- மானிப்பாய் பகுதியில் காணிக்குள் குழி வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து, மானிப்பாய் பொலிஸாருக்கு காணி உரிமையாளர் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழியினை மேலும் தோண்டி ஆயுதங்களை மீட்டனர்.

இதன் போது குழிக்குள் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் நான்கும், அவற்றுக்கு உரிய ரவைக்கூடுகள் மற்றும் ஒரு தொகை ரவைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு , துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!