இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

யாழ்.மாவட்ட எம்.பி அர்ச்சுனாவின் பேஸ்புக் கணக்குகள் ஆய்வு – நடவடிக்கைக்கு தயாராகும் சபாநாயகர்

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமூக வலைத்தள கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், புதிய உறுப்பினர் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து ஆலோசிப்பதாகவும், அவரது அனைத்து முகநூல் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு எதிர்காலத்தில் முறையான ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.

“தனி ஒரு நபராக வைத்தியரின் அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. வைத்தியரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகத் தெளிவாக உள்ளது.

மக்கள் இன்று நாட்டில் அப்படியொரு விடயத்தை எதிர்பார்க்கவில்லை. அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என நாங்கள் நம்புகின்றோம்.

அது ஒரு தனியொருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு தெரியும். அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து பேஸ்புக் கணக்குகளையும் சரிபார்த்தோம். நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம்” என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 130 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்