வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை சட்டவிரோதமாக்கிய இத்தாலி!
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதை இத்தாலி சட்டவிரோதமாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, அமெரிக்கா அல்லது கனடா போன்ற சட்டப்பூர்வமான இடங்களில் அதை நாடுபவர்களையும் சேர்க்க, நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள தடையை நீட்டிக்கிறது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் யூரோக்கள் (£835,710) வரை அபராதம் விதிக்கப்படும்.
இத்தாலியின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு ஆதரவாக 84 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இத்தாலியின் தீவிர வலதுசாரி ஆளும் கட்சியால் முன்மொழியப்பட்ட சட்டம், LGBT தம்பதிகளை குறிவைப்பதாக விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது – அவர்கள் நாட்டில் IVF ஐ ஏற்றுக்கொள்ளவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.