இலங்கை முழுவதும் ஏறக்குறைய 30000 சிறுவர்கள் யாசகம் கேட்பதாக தகவல்!
நாடளாவிய ரீதியில் 20,000 முதல் 30,000 வரையிலான தெருவோரச் சிறுவர்கள் யாசகம் கேட்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கொவிட் தொற்றுநோய் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை வளர்ச்சியைக் காட்டுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் தரவுக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் செய்த ஆய்வுகளில், 2019 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 15,000 பேர் இந்த குழுவில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
2019 க்குப் பிறகு, ஈஸ்டர் தாக்குதல், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த எண்ணிக்கை 20,000 முதல் 30,000 வரை இருக்கலாம். இங்கு பல்வேறு வகையான குழந்தைகள் இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுவர்களை பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும் என தேசிய சிறுவர் நலன்புரி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.