இலங்கை

கட்சித் தலைவரை தெரிவு செய்ய வாக்களிப்பது சிறந்தது : எம். ஏ.சுமந்திரன்!

கட்சித் தலைவரை தெரிவு செய்ய வாக்களிப்பது சிறந்தது என இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இரா சம்பந்தனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தீர்வை வழங்குவோம் என ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை காரியாலயத்தில் இன்றைய தினம் (12.01) கட்சி உறுப்பினர்களை சந்தித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கட்சியில் இணக்கப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்த போது சாத்தியப்படாது என தீர்மானித்ததற்கு அமைய நான் எதிர்பார்த்தபடி ஜனநாயக ரீதியாக வாக்களிப்பதே சிறந்தது எனவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கட்சி ஆதரவாளர்களை இரகசியமான முறையில் சந்திப்பதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கேட்டபோது திருகோணமலைக்கு வழக்கு ஒன்றிக்கு வந்தபோது அண்ணாமலை மாவட்ட கட்சி ஆதரவாளர்களை சந்தித்து பேசியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!